search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி- எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    X

    பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி- எஸ்.பி. தொடங்கி வைத்தார்

    • கல்லூரி மாணவிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பல்வேறு கல்லூரி மாணவிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுப்போம், பெண்களின் நலம் வீட்டின் நலம், ஆரம்பத்திலேயே நோய் கண்டறிந்து குணப்படுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.

    இந்த பேரணியானது ராமநாதன் ரவுண்டானா, ரயிலடி வழியாக சென்று ஆயுதப்படை மைதானத்தில் முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×