search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மாடுகளுடன் உரிமையாளர்கள் திடீர் போராட்டம்
    X

    தஞ்சையில் மாடுகளுடன் அதன் உரிமையாளர்கள் பேராட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி.

    தஞ்சையில், மாடுகளுடன் உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

    • மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
    • மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாநக ராட்சி பகுதிகளில் பொதும க்களுக்கு இடையூறா கவும், போக்குவரத்து இடையூ றாகவும் சாலை களில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபாரதம் விதிக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கியது.

    பிடிப்படும் மாடுகள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்திய பிறகு மாடுகள் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்க ப்படுவதால் பாதிக்க ப்படுகிறோம் எனக் கூறி இன்று 40-க்கும் மேற்பட்ட மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு அண்ணா சிலை அருகே திரண்டனர்.

    பின்னர் அங்கு மாடுகளுடன் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம், தஞ்சை மாநகராட்சியில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.

    நாங்கள் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது சுற்றி திரியும் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் எங்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.

    பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக சாலை களில் கால்நடையாக செல்லும் மாடுகளை பிடிக்கக் கூடாது.

    இரவு நேரங்களில் சுற்றி திரியும் மாடுகளை வேண்டுமானால் பிடிக்கலாம்.

    அந்த காலத்தில் மேய்ச்சலுக்காக தரிசில் இருந்தது.

    தற்போது அவை கிடையாது. எனவே மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும். தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மாடுகள் வளர்ப்போர் கூறினர்.

    இதையடுத்து உங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுங்கள். தற்போது கலைந்து செல்லுங்கள் என போலீசார் எடுத்துக் கூறினர்.

    இதனை ஏற்றுக் கொண்டு உரிமையாளர்கள் தங்களது மாடுகளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    இந்த திடீர் போராட்ட த்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×