என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், இடிந்த தரைப்பாலத்தை புனரமைப்பது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
- மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
- 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் சிராஜூதீன் நகர் பெரியசாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
பாலம் கட்டப்பட்டு 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் புனரமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.