search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், பிரபல நகைக்கடையில் பல லட்சம் மோசடி
    X

    நகைக்கடை முன்பு திரண்ட பொதுமக்கள்.

    தஞ்சையில், பிரபல நகைக்கடையில் பல லட்சம் மோசடி

    • பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை– போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பணம் கட்டிய ரசீதுடன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது.

    தஞ்சையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.

    அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை–யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கூறினர்.

    இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளுமு பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தஞ்சையில் உள்ள அந்த கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பணம் கட்டிய ரசீதுடன் திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறு கூறினர்.

    இது குறித்து பாதிக்கப்–பட்ட பொதுமக்கள் கூறும்–போது, ஏழை எளிய மக்களின் சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்றியுள்ளனர். ரூ.10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பலரும் ஏமாந்துள்ளனர்.

    மிகவும் சிரமப்பட்டு உழைத்த தொகையை தங்களுக்கு மீண்டும் பெற்று தர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×