என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சையில், விழிப்புணர்வு நடைபயணம் தஞ்சையில், விழிப்புணர்வு நடைபயணம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/13/1931841-8.webp)
தஞ்சையில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
தஞ்சையில், விழிப்புணர்வு நடைபயணம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பொதுக்கள், பஸ் பயணிகளிடம் போலி டாக்டர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ஸ்டீராய்டு கிரீம்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும பக்க விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு.
தஞ்சாவூர்:
இந்திய தோல், பால்வினை மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் 13-வது ஆண்டு கருத்தரங்க மாநாடு கடந்த 11-ந்தேதி தஞ்சை மஹாராஜா மஹாலில் தொடங்கியது. விழாவில் 2-ம் நாளான நேற்று பல்வேறு மருத்துவ தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றன.
விழாவில் நிறைவு நாளான இன்று காலை தோல் மருத்துவத்தில் போலி மருத்துவர்களை களையக்கோரி விழிப்புணர்வு நடைபயணம் (வாக்கத்தான்) நடை பெற்றது.
இதற்கு இந்திய தோல், பால்வினை மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்க தேசிய தலைவர் டாக்டர் விஜய் ஜவார், கவுரவ பொது செயலாளர் டாக்டர் தினேஷ்குமார் தேவராஜ், மாநில தலைவர் டாக்டர் காளீஸ்வரன், கவுரவ செயலாளர் டாக்டர் அன்னி புளோரா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டு தலைவர் பத்மானந்தன் முன்னிலை வகித்தார். இந்த நடைபயணத்தில் தோல் சம்பந்தமான மருத்துவ பட்டப்படிப்பு படிக்காமல் சில மாத கோர்ஸ் படித்து விட்டு தோல், முடி, நகம் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்களை களைய வேண்டும். இந்த போலி டாக்டர்களிடம் பொது மக்கள் மருத்துவம் பார்க்க கூடாது.
தோல், முடி, நகம் சிகிச்சையை தகுதியான தோல் மருத்துவரிடம் ( எம்.டி. தோல் மருத்துவம், எம்.டி.டி.வி.எல். டி.என்.பி.டி.வி.எல், டி.டி.வி.எல், டி.டி ) மட்டுமே பெற வேண்டும். தோல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மேற்பூச்சு ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஸ்டீராய்டு கிரீம்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும பக்க விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டன.
இந்த நடைபயணமானது மஹாராஜா மகாலில் தொடங்கி புதிய பஸ் நிலை யத்தில் முடிவடைந்தன. அங்கும் பொதுக்கள், பஸ் பயணிகளுக்கு தோல் மருத்துவத்தில் போலி மருத்துவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாநாட்டு தலைவர் டாக்டர் கலைசெல்வன், பொருளாளர் டாக்டர் கோபாலகிருஷ்ண பாண்டியன், அறிவியல் தலைவர் டாக்டர் கவியரசன், டாக்டர்கள் மாணிக்கவாசகம், பிரசாத், ராஜசேகர், ஜீவலட்சுமி, பாண்டியன், பாலசுப்பிர மணியன் உள்பட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இன்று தொடர்ந்து நிறைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றன. பல்வேறு தலைப்புகளின் கீழ் டாக்டர்கள் பேசினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.