search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், டாஸ்மாக் பாரில் மது குடித்த முதியவர் திடீர் சாவு- மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
    X

    தஞ்சையில், டாஸ்மாக் பாரில் மது குடித்த முதியவர் 'திடீர்' சாவு- மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

    • கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.
    • சிகிச்சைக்காக 2 பேரும் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 67).

    அதே பகுதியை சேர்ந்தவர் விவேக் (36).

    இவர்கள் 2 பேரும் இன்று கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

    இதை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.

    உடனடியாக இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது,

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு குப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து விவேக்கிற்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழகத்தில் கள்ளசாராயத்தில் பலர் இறந்த நிலையில் தஞ்சையில் இன்று மது குடித்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×