search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
    X

    கால்பந்தை எட்டி உதைத்து போட்டியை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின .
    • ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று 15 வயது முதல் 25 வயது வரையிலான மாணவ- மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின .

    முதல் நாளான இன்று ஆண்களுக்கான கைப்பந்து , கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண் .ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி.

    உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், விளையாட்டு பயிற்சியாளர் பாபு மற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை பெண்களுக்கான கையுந்து விளையாட்டு போட்டிகள், கால்பந்து போட்டிகள் 26-ந் தேதியும் நடைபெறும்.

    இதேபோல் ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கையுந்து பந்து விளையாட்டு போட்டிகள் ( ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.15000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    கால்பந்து போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.25000, 2-ம் பரிசாக ரூ.20000, 3-ம் பரிசாக ரூ.10000 வழங்கப்படும். கபடி போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.20000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    Next Story
    ×