என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், மாநில அளவிலான மாரத்தான் போட்டி; ஆகஸ்டு 20-ந் தேதி நடக்கிறது
- பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
- ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் கல்வியே நாட்டின் முதல் அரண், போதை பொருள் தடுப்பு மற்றும் சிறுவர்- சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வுக்காக வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது.ஆண் மற்றும் பெண் ( ஓபன் ) பிரிவில் 20 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும் நடைபெற உள்ளன.
இதில் ஆண் மற்றும் பெண் (ஓபன்) பிரிவிற்கு நுழைவு கட்டணமாக ரூ.250- செலுத்த வேண்டும். முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.
மேலும் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசாக 50 பேர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.
இதே போல் பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். முதல் பரிசு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்க ப்படும்.
இந்த பிரிவிலும் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.
இந்த மாரத்தானில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.
இந்தியாவில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.
நிர்வாகம் எடுக்க முடிவே இறுதியானது.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7598093559 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை தணுவர்சன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் உலகநாதன் தெரிவித்துள்ளார்.






