என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், சமுதாய நாற்றங்கால் தோட்டம் எனும் திட்டம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- எனக்கு விருது கிடைத்தது கூட்டு முயற்சியால் தான்.
- விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தது மன நிறைவை கொடுக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை உழவர் சந்தை எதிரில் சிட்கோ வளாகத்தில் கவின்மிகு தஞ்சை - சமுதாய நாற்றங்கால் தோட்டம் என்ற திட்டத்தை இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ஆங்கில புத்தாண்டு தினத்தில் சமுதாய நாற்றங்கள் தோட்டம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் லயன் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் , தன்னார்வலர்கள் என அனைவரும் ஒரு இடத்தில் கூடியுள்ளோம்.
சமுதாய நாற்றங்கால் தோட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் மரக்கன்றுகள் நடுதல், தற்போது சமுதாய மாற்றங்கள் தோட்டம் என அவர்களது பல்வேறு சமுதாய , பசுமையான பணிகள் பாராட்டுக்குரியது. விரைவில் கவின்மிகு தஞ்சை இயக்கத்திற்கு கிரீன் சாம்பியன் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனக்கு விருது கிடைத்தது கூட்டு முயற்சியால் தான்.
தனி மரம் என்றைக்கும் தோப்பு ஆகாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உங்களது சேவையை பாராட்டி விருது வழங்குகிறோம் என கூறினர். அதன்படி அவர்களும் எனக்கு விருது வழங்கினர். ஆனால் தனிப்பட்ட என்னால் மட்டும் இந்த விருது உள்பட பல்வேறு விருதுகளும் எனக்கு கிடைக்கவில்லை.
அனைவரும் ஒன்று சேர்ந்து பணி செய்த கூட்டு முயற்சியால் மட்டுமே அது சாத்தியமானது. முதலமைச்சர் கையால் விருது வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. முதலமைச்சர் கையால் விருது வாங்கிய பிறகு இன்னும் எனது பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு உந்துதல் கிடைத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று செந்தமிழ் நகர் திட்டம் உருவாக்கப்பட்டது. முற்றிலும் விளிம்பு நிலையில் உள்ள ஏழை மக்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ஏழு வீடுகள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 வீடுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் 11 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வீடுகள் மட்டுமே பாக்கி உள்ளது. வீடுகள் கட்டிக் கொடுக்க லயன் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், அறக்கட்டளைகள் இன்னும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உறுதுணையாக இருந்து தேவையான நிதி வழங்கினர். அதனால்தான் விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிந்தது.
அவர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டி கொடுப்பது என்பது கடினமான பணி. இருந்தாலும் அனைவரது கூட்டு முயற்சியால் அந்த பணியையும் திறம்பட செய்து முடித்துள்ளோம். விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது எனக்கு மன நிறைவை கொடுத்துள்ளது. அரசு பணியில் சேர்ந்து இந்த பணியை செய்தது மன நிறைவு. தொடர்ந்து அரசின் திட்டங்கள் அனைத்தும் கடை கோடி மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்