search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், வீடு வீடாக கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி- மேயர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சையில் உள்ள ஒரு வீட்டில் கியூஆர் கோடு ஸ்டிக்கரை மேயர் சண்.ராமநாதன் ஒட்டினார்.

    தஞ்சையில், வீடு வீடாக கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி- மேயர் தொடங்கி வைத்தார்

    • எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.
    • இந்த திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் ஏற்பாடுகள் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் கியூ ஆர் ஸ்கேன் கோடு ஓட்டும் பணி இன்று தொடங்கியது.

    தஞ்சாவூர் உமா நகர் பகுதியில் வீடு வீடாக கியூ ஆர் ஸ்கேன் கோடு ஒட்டும் பணியை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    அவர் வீடு வீடாக சென்று இந்த ஸ்டிக்கரை ஒட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு உத்தரவுபடி இன்று வீடு வீடாக சென்று கியூ ஆர் கோடு ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.

    மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கியூ ஆர் கோடு ஓட்டப்படும்.

    அடுத்ததாக இந்த கியூ ஆர் கோடில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், வார்டு எண், வீட்டு எண், கட்டிடம் பயன்பாடு, இருப்பிட விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

    அதன் பிறகு வீட்டில் இருந்தபடியே தங்களது மொபைலில் கியூ ஆர் ஸ்கேன் செய்து அதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தலாம்.

    இது தவிர குடிநீர் பிரச்சனை, குப்பைகள் அள்ளாமல் இருப்பது உள்ளிட்ட எந்த வகையான பிரச்சனை இருந்தாலும் அதனை உடனடியாக கியூ ஆர் ஸ்கேனில் பதிவு செய்யலாம்.

    பதிவு செய்த பிறகு அடுத்த சில மணி நேரங்களில் பிரச்சனை தீர்க்கப்படும்.

    நீங்கள் கியூ ஆர் ஸ்கேன் செய்யும் போது உங்களது இருப்பிடம் காண்பிக்கும்.

    மேலும் உங்களது அனைத்து விவரங்களும் எங்களுக்கு தெரிய வரும். இந்தத் திட்டம் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே பயன்பெறலாம்.

    இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து வீடுகளிலும் கியூ ஆர் கோடு ஒட்டும் பணி முடிவடைந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×