என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் காவல் கட்டுப்பாட்டு அறையில் மயங்கி விழுந்த ஏட்டு சிகிச்சை பலனின்றி சாவு
- நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
- அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சேலம்:
சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணி–யாற்றி வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 49).
இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்–சந்திரன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா இவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஏட்டு ஜெயச்சந்திரன் மனைவி காயத்ரி சேலம் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல–கத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு ஜெயசூர்யா என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். ஜெயச்சந்திரன் கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.