search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்
    X

    திருவாரூரில், நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

    • 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ. 600-ஆக உயர்த்த வேண்டும்.
    • திருவாரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் பேராட்டம் நடைபெற உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ. 600-ஆக உயர்த்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டும், நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு இடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாளை (7-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் பேராட்டம் நடைபெற உள்ளது.

    நீடாமங்கலத்தில் நடைபெறும் போராட்டத்தில் செல்வராசு எம்.பி.யும், திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் போராட்டத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ.வும் பங்கேற்கின்றனர்.

    மற்ற மையங்களில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.

    இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×