search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி ஊராட்சியில் நீரோடையில் சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    ஏலகிரி ஊராட்சியில் நீரோடையில் சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    • ஓடையில் நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • ஜேசிபி இயந்திரம் மூலம் வந்ததினால் அதிர்ச்சி அடைந்து ஒன்றிணைந்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது சென்ராயன் கொட்டாய் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் ஏலகிரி பெரிய ஏரி பகுதியில் இருந்து நாகவதி அணைக்கு நீர் செல்லக்கூடிய நீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் வேடம்பள்ளம் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் வேடம்பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை அளவீடு செய்வதற்கு நேற்று சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வந்ததினால் அதிர்ச்சி அடைந்து ஒன்றிணைந்தனர். அதன் பிறகு நீர்ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்ற வேண்டும் தனி நபர்களுக்காக சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தாசில்தார் நீர் ஓடைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மட்டுமே அளவீடு செய்து அகற்ற வந்துள்ளோம், சாலை போடுவதற்கு நாங்கள் வரவில்லை என கூறினார்.

    அதன் பிறகு ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்த பிறகு அதனை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் எடுக்க வேண்டாம் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என ஆக்கிரமிப்பு செய்திருந்த விவசாயிகள் தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். மேலும் ஏலகிரியில் இருந்து ஓமல்நத்தம் பகுதி வரை இந்த நீரோடை பகுதியில் இரு புறங்களிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அளவீடு செய்து அதற்கு தடுப்பணைகள் கட்டினால் அதிக அளவிலான தண்ணீர் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கூறுகின்றனர். அதைத் தவிர்த்து ஒரு சில நபர்களுக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த அளவீடு பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அளவிடு பணி நடந்த இடத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் தொப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×