என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் உழவர் குழுக்களுக்கு ஊக்கத்தொகை
- இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
- கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலபடுத்தி ஊக்குவிக்கவும், அங்கக இடுபொருட்களை உழவர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யவும், 2023-24-ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இயற்கை விவசாயம் செய்திடும் அல்லது செய்திட ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதன்மூலம் இயற்கை இடுபொருட்கள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவன் செயலியின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவ லுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.