என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீர்பிடிப்பில் தொடர் மழை: 50 அடியை எட்டிய மஞ்சளாறு அணை நீர்மட்டம்
- தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமை ந்துள்ள குமுளி, தேக்கடி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.70 அடியாக உள்ளது. வரத்து 725 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2394 மி.கனஅடி.
கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது. நீர்வரத்து 1406 கனஅடியாகவும், நீர் இருப்பு 6219 மிகனஅடியாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 47.17 அடியாக உள்ளது. வரத்து 7 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1640 மி.கனஅடி.
பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 49.80 அடியாக உள்ளது. இதன் மொத்த உயரம் 57 அடியாகும். மழை மேலும் நீடிக்கும் என்பதால் விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணைக்கு 41 கனஅடி நீர் வருகிறது. இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.85 அடியாக உள்ளது. வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 37.67 மி.கனஅடி.