search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கடத்தலின் போது சம்பவம்: போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி மின் வேலியில் சிக்கினார்  ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    மணல் கடத்தலின் போது சம்பவம்: போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி மின் வேலியில் சிக்கினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • மணல் கடத்தலின் போது சம்பவம் போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி மின் வேலியில் சிக்கினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி.எடையாறு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தென்பெண்ணையாறு ஓடுகிறது. இங்கு அந்த பகுதியில் மர்ம மனிதர்கள் மாட்டு வண்டியில் இரவு-பகல் பாராமல் மணல் திருடி வருகிறார்கள். அதன்படி டி.எடையாறு கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 45) என்பவர் தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி கொண்டிருந்தார். இந்த தகவல் போலீசாருக்கு எட்டியது.தகவலறிந்த போலீசார் தென்பெண்ணையாற்று பகுதிக்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த பழனி அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் செல்லும் வழியில் அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் காட்டு பன்றிக்காக மின்வேலி போடப்பட்டு இருந்தது.

    இதனை கவனிக்காத பழனி அந்த வழியாக சென்ற போது மின் வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள விவசாயிகள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×