search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உயர்வுதொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
    X

    தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உயர்வுதொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

    • குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்கப்பட்டது.
    • இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்கப்பட்டது. இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுகா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

    நேற்று கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தி

    யாளர் சங்க தலைவர் சங்க

    மேஸ்வரன் தலைமையில், 3-ம் கட்ட போனஸ் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதுகுறித்து சங்க மேஸ்வரன் கூறியதாவது:-

    நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக

    உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறியதன்படி, கடந்த ஆண்டு கொடுத்த 8.15 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறினோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் அதற்கு உடன்படாமல் சென்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார். விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்ரமணி கூறுகையில், நாங்கள் 20 சத வீதம் போனஸ் கேட்டோம். ஆனால் உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு கொடுத்த 8.15 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறினார்கள். அதில் எங்களுக்கு உடன்பா டில்லை என்றனர்.

    இதில் கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சுந்தரராஜ், ராஜேந்திரன், குமாரசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் பாலசுப்ரமணி, சுப்ரமணி, பாலுசாமி, வெங்கடேசன், சரவணன், சரஸ்வதி, செல்வராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×