என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாயர்புரம் போப் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு
- மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது.
- தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சாயர்புரம்:
மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, கோவிந்தம்மாள் கலைக்கல்லூரி, பிஷப் கால்டுவெல் கலைக்கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி மற்றும் பல கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவு தலைவர் ஜெயசுதா பெர்சியா தலைமை தாங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி கணித துறை விரிவுரையாளர் பெலிஸ்டா சுகிர்த லிசி, வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிதி சமீலா, தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கபட்டனர். சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியை சகாய ஹென்ஸி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.