search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் திட்டம் : கல்லூரி மாணவிகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்

    புதுமைப்பெண் திட்டம் : கல்லூரி மாணவிகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    • 2023-24ஆம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தளமானது நாளை (4-ந் தேதி) தொடங்கப்பட உள்ளது.
    • தகுதியுள்ள மாணவிகள் அனைவரும் தாங்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் வாயிலாக நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    திண்டுக்கல்:

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) தமிழக முதல்-அமைச்சரால் மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ.யின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    தற்போது 2023-24ஆம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தளமானது நாளை (4-ந் தேதி) தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவிகள் அனைவரும் தாங்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் வாயிலாக நாளை முதல் ஆதார் எண், கைபேசி எண் (ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்), வங்கிக் கணக்கு எண், பள்ளி சேர்க்கை எண், கல்வி நிலை சேர்க்கை தேதி, கல்வி ஆண்டு, பாடநெறி காலம், படிப்பின் பெயர் ஆகிய விபரங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×