என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுடன் நிரந்தர சேமிப்பு கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்
- கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
- பருவம் தவறி பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லானது, கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
இதனால், மழைக் காலங்களிலும் பருவம் தவறி பெய்யும் மழையிலும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலையும்,வெயில் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைப்பதால் ஏற்படும் எடை குறைவால் நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கும், அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்க தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்புக் கிடங்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் வலியுறுத்தி உள்ளார்.