search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி பகுதியில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வலியுறுத்தல்
    X

    சீர்காழி பகுதியில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வலியுறுத்தல்

    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது.
    • இறைச்சிகழிவுகள், இறந்த விலங்கினங்கள், நெகிழி பொருட்கள் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம்,கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் 20கிராமங்களின் சேகரிக்கப்படும் ஊராட்சி குப்பைகள்,கழிவுகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு நீர்நிலை மாசுஏற்பட்டுவந்தது.

    மேலும் அப்பகுதியில் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் நிலவியது.

    நீர்நிலை பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு வழக்குரைஞர் அறிவிப்பானையை ஊராட்சி ஒன்றியத்திற்கு அனுப்பினார்.

    அதன்பின்னர் நீர்நிலை அருகே குப்பைகள் கொட்டக்கூடாது என நீர்வளஆதாரத்துறையினர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டாலும், 2ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குப்பைகளை மக்கும்குப்பை,மக்காத குப்பை என தரம்பிரித்து எடுத்து சென்று கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யாமல் பொதுமக்கள் கூடும் இடங்கள்,குடியிருப்புகள்,பள்ளிகள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.

    குப்பைகளுடன் இறைச்சிகழிவுகள்,இறந்த விலங்கினங்கள்,நெகிழி பொருட்களும் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்,சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. ஆகையால் இரண்டு ஊராட்சிகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை குவித்து வைக்காமல் மாற்று இடம் தேர்வு செய்து தரம்பிரித்து கொட்டிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்ளிடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளருக்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

    Next Story
    ×