என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேக்கு நாற்றங்காலில் மாவட்ட வன அலுவலர் ஆய்வு
- வாழப்பாடி வனச்சரகத்தின் கீழ், சென்றாயன் பாளை யத்தில் நாற்றங்கால் அமைத்து 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- இந்த நாற்றங்காலை சேலம் மாவட்ட வன அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.
வாழப்பாடி:
தமிழ்நாடு அரசு வனத்து றையின் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ், வாழப்பாடி பகுதியில் பசுமை பரப்பை அதிகரிக்க வனத்துறை மூலமாக, பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக வாழப்பாடி வனச்சரகத்தின் கீழ், சென்றாயன் பாளை யத்தில் நாற்றங்கால் அமைத்து 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த நாற்றங்காலை சேலம் மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) எஸ். கவுதம் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் மற்றும் வனத்துறை பணி ணயாளர்கள் உடனிருந்த னர்.
வாழப்பாடி வனச்சர கத்திற்கு உட்பட்ட பகுதியில், மரத்தோட்டம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், சேசன்சாவடியிலுள்ள வாழப்பாடி வனச்சரக அலுவலகத்தில், தங்களது நிலத்திற்கான பட்டா, சிட்டா, ஆதார் நகல்களை கொடுத்து, பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தெரிவித்தார்.