search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில், உலக மகளிர் தின விழா
    X

    விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மணி சங்கர் ஐயர் பேசினார்.

    மயிலாடுதுறையில், உலக மகளிர் தின விழா

    • ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
    • மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உலக மகளிர் தின விழா மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேல் வீதியில் உள்ள ஆர்.ஓ.ஏ. சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ரசர்வதேச கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராகவேந்திரன், வணிகர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர் தமிழரசன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம், பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் அறம்செய் அறக்கட்டளை செயலாளர் மரகதவல்லி செந்தில் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர்அய்யர் கலந்துகொண்டு சாதனை படைத்த மகளிருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகையில்

    இந்தியாவில் அரசியில் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு தான் பெண்கள் வெளிஉலகத்திற்கு வரத்தொடங்கினர்.

    குறிப்பாக அரசியலில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கி ஒரு தேர்தலில் பெண் நிற்கும்போது அவரை எதிர்த்து ஒருசில பெண்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டு ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

    பொதுவாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பெண்கள் அவர்கள் பணியை அவர்களது கணவர்கள் மேற்கொள்வதை அனுமதிக்கக்கூடாது பெண்கள் தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இதில் அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிகணேசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், கனகசபை, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், அறம்செய் அமைப்பு சிவக்குமார், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர்ஜெயின் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×