என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணி இடங்களுக்கான நேர்காணல் - நாளை நடைபெறுகிறது
- நேர் காணலுக்கு வந்தவர்களிடம் கல்வித் தகுதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்தது.
- இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 10 அலுவலக உதவியாளர் மற்றும் 3 ஜீப் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்காணல் வருகிற 29, 30, 31-ந்தேதி ஆகிய 3 நாடகள் தூத்துக்குடி யூனியன் அலு வலகத்தில் நடை பெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி யாளர் பணி மற்றும் ஒரு இரவு காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடை பெற்றது. புதுக்கோட்டையில் உள்ள யூனியன் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலின் போது விண்ணப்பதாரர்களிடம் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், ஆணையாளர் ஹெ லன் பெண்மணி, துணை சேர்மன் ஆஸ்கர் ஆகி யோர் நேர்காணல் நடத்தினர். நேர் காணலுக்கு வந்தவர்களிடம் கல்வித் தகுதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றி தழ்கள் சரிபார்ப்பு நடந்தது.
அலுவலக உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போது மானது ஆனால் என்ஜினீயரிங் பட்டதாரிகள், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என 2 காலி பணியிடங்களுக்கு 656 பேர் நேர்காணக்கு வந்திருந்த தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. நேர்காணலின் போது மேலாளர் சண்முக சுந்தரி மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.
நாளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் காலியாக உள்ள இரவு காவலாளி பணிக்கான நேர்முகத் தேர்வு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் 180-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுடன் நேர்காணல் நடைபெற உள்ளது. இதனைத் தொ டர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 10 அலுவலக உதவியாளர் மற்றும் 3 ஜீப் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்காணல் வருகிற 29, 30, 31-ந்தேதி ஆகிய 3 நாடகள் தூத்துக்குடி யூனியன் அலு வலகத்தில் நடை பெறுகிறது. இதில் மா வட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) கலந்து கொண்டு நேர்கா ணலை நடத்துகிறார்.