என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
- மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (வயது 29) என்பவரை நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகனிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அறிவழகன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் நேற்று கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் அருகே செக்போஸ்டில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ் (வயது 29) என்பவரை நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிசாமி, பாப்பாரப்பட்டியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகனிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அறிவழகன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார், தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.