search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரம் அறிமுகம்
    X

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரம் அறிமுகம்

    • நடைபாதை பாலத்தில் ஏறி இறங்கி சென்று கியூ வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து வந்த பயணிகள் மகிழ்ச்சி
    • தானியங்கி எந்திரத்தில் டிக்கெட் எடுத்து ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர சென்னை செல்லக்கூடிய நீலகிரி மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ் ெரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை திருநெல்வேலிக்கும் சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து தினமும் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பயணிகள் கோவை மட்டுமின்றி, பிற நகரங்களுக்கும் சென்று வருகின்றனர்.

    குறிப்பாக மேட்டுப்பாளையம்-கோவை இடையான ெரயிலில் அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் சீசன் டிக்கெட் எடுத்துள்ளனர்.

    சீசன் டிக்கெட் எடுக்காதவர்கள், ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில், டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் நடைபாதை பாலம் வழியாக ஏரி இறங்கிதான் நடைமேடைக்கு வர வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதனால் முதியோர்கள், குழந்தைகள், பெண்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். எனவே ரெயில் நிலையத்தில், தானியங்கி டிக்ெகட் எந்திரம் நிறுவ வேண்டும் என மேட்டுப்பாளையம் ெரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ெரயில் நிலைய பயணிகள் சங்க நிர்வாகிகள், பயணிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இவர்களின் கோரிக் கையை ஏற்று, மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய நடைமேடையில் இருப்பு பாதை போலீஸ் நிலையத்துக்கு அருகே தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் நிறுவப்பட்டது.

    இந்த எந்திரம் நேற்று முதல் பயன்பாட்டிற்க வந்தது. அதில் பயணிகள் டிக்கெட் எடுத்து ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    நீண்ட நாட்களாக நடைபாதை பாலம் ஏறி, இறங்கி வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து வந்த பயணிகள் தற்போது நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள எந்திரத்தில் டிக்கெட் எடுத்து சென்று வருகின்றனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தில், க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தும் டிக்கெட்டை பெற முடியும். இதனால் ெரயில் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.

    Next Story
    ×