என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கயத்தாறு அருகே இரும்பு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை-போலீசார் விசாரணை கயத்தாறு அருகே இரும்பு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை-போலீசார் விசாரணை](https://media.maalaimalar.com/h-upload/2023/02/18/1837858-3suicide.webp)
கயத்தாறு அருகே இரும்பு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை-போலீசார் விசாரணை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கொம்பையா கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
- அதிர்ச்சி அடைந்த பால்மணி கதறி அழுது கூச்சலிட்டுள்ளார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமம் கிணற்று தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 42). இவர் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
கொம்பையாவிற்கு பால்மணி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். கொம்பை யாவிற்கு இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கொம்பையா கேரளாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
தினமும் மது குடித்து விட்டு சுற்றி வந்த கொம்பையா நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச்சென்றுள்ளார். இன்று அதிகாலையில் அவரது மனைவி பால்மணி எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் கொம்பையா தூக்கு போட்ட வாறு பிணமாக தொங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பால்மணி கதறி அழுது கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கயத்தார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கொம்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொம்பையாவின் தற்கொலை காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துக்கொண்ட கொம்பையாவிற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.