search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஷாவில் அத்துமீறி நுழைந்த த.பெ.தி.க. அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    ஈஷாவில் அத்துமீறி நுழைந்த த.பெ.தி.க. அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    • ஈஷா யோக மையத்தினர் மீது பதியப்பட்ட வழக்கில் எவ்வித முகாந்திரம் இல்லை.
    • எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்ய நுழைந்தனர் என கேள்வி எழுப்பினார்.

    கோவை:

    ஈஷா யோகா மையம் முறையான அனுமதிகளைப் பெற்று நவீன எரிவாயு மயானம் ஒன்றை அமைத்து வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் சிவஞானம், சுப்ரமணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக ஈஷா மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி த.பெ.தி.க.வை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற நபரின் தலைமையில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான்தோன்றித்தனமாக 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் ஈஷாவின் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அவர்களை காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    இதையடுத்து, ஈஷாவிற்குள் நுழைய முயன்று முடியாமல் போனதன் காரணமாக ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஈஷா யோக மையத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை. மயான கட்டுமானப் பகுதிக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறி நுழைய முயற்சித்த த.பெ.தி.கவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்ய நுழைந்தனர் என த.பெ.தி.க. நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×