என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று மாலை நடக்கிறது: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 4 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்- 900 போலீசார் குவிப்பு
    X

    கோப்புப்படம்

    கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று மாலை நடக்கிறது: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 4 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்- 900 போலீசார் குவிப்பு

    • அம்பையில் இன்று மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது.
    • தூத்துக்குடியில் நடைபெறும் பேரணியானது வி.வி.டி சிக்னலில் முடிவடைகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று மாலை நடைபெற உள்ளது.

    நெல்லை

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. நெல்லை மாவட்டம் அம்பையில் இன்று மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது. இந்த பேரணியானது அம்பை கிருஷ்ணன்கோவிலில் தொடங்கி மெயின் பஜார் வழியாக ராணி பள்ளி அருகில் முடிவடைகிறது. இதனை யொட்டி ஏ.டி.எஸ்.பி. தலைமை யில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற பேரணியை யொட்டி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 290 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேரணியானது சங்கர ன்கோவில் சங்கரநாராயணர் கோவில் வடக்கு ரதவீதியில் தொடங்கி நகைக்கடை பஜார், திருவேங்கடம் சாலை, கிழக்கு ரதவீதி வழியாக மீண்டும் வடக்கு ரதவீதியை வந்தடைகிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் கல்லூரி அருகில் பேரணி தொடங்கி பிரையண்ட் நகர் கிழக்கு வழியாக வி.வி.டி சிக்னலில் முடிவடைகிறது. இந்த பேரணியையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் ஸ்ரீவை குண்டத்திலும் கள்ளபிரான் சுவாமி கோவில் முன்பு தொடங்கி வ.உ.சி. திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. அங்கும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    Next Story
    ×