search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் குற்றச்செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது  -அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    குழந்தைகள் குற்றச்செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது -அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமப்பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
    • சட்டத்திற்கு புறம்பான செயலில் குழந்தைகள் ஈடுபடுவது தமிழகத்தில் 2-வது மாவட்டமாக தூத்துக்குடி உள்ளதாக அமைச்சர் கூறினார்

    தூத்துக்குடி:

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

    குழந்தைநேய தூத்துக்குடி

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். பயிற்சி முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து, குழந்தைகளைக் கொண்டாடுவோம், குழந்தைநேய தூத்துக்குடி மாவட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதனை கலெக்டர் செந்தில்ராஜ் பெற்று கொண்டார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமப்பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முறையான உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சட்டத்திற்கு புறம்பான செயலில் குழந்தைகள் ஈடுபடுவது தமிழகத்தில் 2-வது மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இது வேதனை அளிக்கிறது.

    குற்றச்செயல்

    குற்றச்செயல்களில் சிறார்களை ஈடுபடுத்துவதில் 2-வது இடத்தில் இருப்பதால் முதல்-அமைச்சர் குழந்தைகள் சம்பந்தமான எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேகப்படுத்தி இருக்கிறார்.

    ஆனால் முறையான சட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற முறையில் தான் செயல்பட்டு வருகிறோம்.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் நாளை சிறப்பு நிகழ்வாக யூனிசெப் நிறுவனம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒரு வருடத்தில் சிறுவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுத்துவதை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் பூரணி, சரண்யாசதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×