என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மக்கள் பிரதிநிதிகள் கடமை - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேச்சு
- தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.
- கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகருக்கு வழங்கினார்.
உடன்குடி:
தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.
தொடர்ந்து மக்களிடம் நேரில் சென்று கவுன்சிலரின் செயல்பாடைபற்றி கேட்டறிந்தார்.
புதுமனை மேலத்தெரு வில் உள்ள அங்கன்வாடியை விரைவில் புதுப்பித்து கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை பற்றிகூறினர்.
அப்போது அவர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் பார்வையிட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதியின் கடமை யாகும், நம்மை தேர்வு செய்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருந்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்என்று ஜவாஹிருல்லா கூறினார்,
மேலும், உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி சிறப்பான முறையில் உடன்குடி பேரூராட்சி மன்றத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனை களை நிர்வாகிகருக்கு வழங்கினார்.
அப்போது, மாநில தலைமை பிரதிநிதி ஜோசப் நொலாஸ்கோ, தூத்துக்குடி மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஆஸாத், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா கல்லாசி, 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மது ஆபித், மாவட்ட பொருளாளர் சர்தார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்பரகத்துல்லா, உடன்குடி நகரத் தலைவர் அஜீஸ், ம.ம.க. நகர செயலாளர் ஹமீது, த.மு.மு.க. நகர செயலாளர்சாதிக், செய்யாது, புஹாரி, ஆசிக் ரகுமான், அத்தாது, சுஹைல், யாசர், நவாஸ், ஹாலித், தி.மு.க. கிளை செயலாளர்கள் சுபியானசம்சுதீன் மற்றும் மீராசாகிப், ஹரிஷ், அஸர், ஜகுபர், ரியாஸ் ஜாபர், இப்ராஹிம், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்