என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
- காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டார பகுதிகளான மாமங்கலம், வானமாதேவி, மா.கொளக்குடி, லால்பேட்டை, மோவூர், ஆயங்குடி, எடையார், கிருஷ்ணாபுரம், சிட்டமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் அங்கு வசிப்பவர்கள் அவதி பட்டனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள். அதோடு நேரடி நெல் விதைப் பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழை நேரடி நெல் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.