search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகேசாலையில் நெல் குவியல் அருகே வைத்திருந்தகருங்கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து:போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப பலி
    X

    சப் இன்ஸ்பெக்டர் மணி.

    தியாகதுருகம் அருகேசாலையில் நெல் குவியல் அருகே வைத்திருந்தகருங்கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து:போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப பலி

    • மணி (வயது59) போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். இவர் தியாக துருகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்மீது மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடு மாறி மணி கீழே விழுந்ததில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது59). தியாகதுருகம் போலீஸ் நிலை யத்தில்வர் நேற்று புகார் மனு சம்மந்த மான விசாரணைக் காக தியாக துருகத்தில் இருந்து பானை யங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வி.புதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது சாலையில் நெல் குவித்து மூடப்பட்டு அதன் அருகே கருங்கல் வைக்கப்பட்டிருந்தது.

    அந்த கல்மீது மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடு மாறி மணி கீழே விழுந்ததில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோ தனை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணி ஓய்வு பெற இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் மனு விசாரணை க்காக சென்றபோது தவறி விழுந்து இறந்து போன சம்பவம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×