என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயிலர் திரைப்பட வில்லன் பாணியில் வாலிபரின் தலையில் சுத்தியலால் அடித்து கொல்ல முயற்சி: மாமியாருடன் பழகியதால் மருமகன் வெறிச்செயல்
- அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார்.
- உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் கவுதம் (வயது 25). வெல்டிங் பணி செய்து வருகிறார். இவர் மொரட்டாண்டியில் வசிக்கும் சசிகலாவின் மகளான சுவேதாவை திருமணம் செய்து கொண்டார். இவர் மொரட்டாண்டியில் வீடு வாடகை எடுத்து தனியாக வசித்து வந்தார். சுவேதாவின் தந்தை மணி இறந்து போனதால் சசிகலா தனியாக வசித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் கோபி (22). இவருக்கும் சசிகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சசிகலாவின் வீட்டிற்கு கோபி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இருவரும் அடிக்கடியே தனியே சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இத்தகவல் அறிந்த கவுதம், தனது மாமியாரான சசிகலாவை கண்டித்துள்ளார். அதேபோல கோபியையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத, சசிகலாவும், கோபியும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்தனர். நேற்று மதியமும் இருவரும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபி வீட்டிற்கு சென்றார். கோபியை அழைத்து மீண்டும் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டையில் பிளவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கோபி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு கவுதம் அங்கிருந்து தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் கோபியை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 30 தையல் போடப்பட்டு உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த கவுதம், புதுவை மாநிலம், ஜிப்மரில் உள்ள தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். நடந்த சம்பவத்தை கூறி சுத்தியலை ஓப்படைத்து போலீசாரிடம் சரணடைந்தார். இது குறித்து அவர்கள் வானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வானூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தன்வந்திரிநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். புதுவை போலீசார் அவர்களிடம் கவுதமை ஓப்படைத்தனர். அவரை வானூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மாமியாருடன் பழகி வந்த வாலிபரை ஜெயிலர் பட வில்லன் பாணியில் சுத்தியால் அடித்து கொலை செய்ய மருமகன் முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்