search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிஸ்தலம் பகுதியில் கரும்பு பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்
    X

    மஞ்சள் நோய் தாக்கப்பட்ட கரும்பு.

    கபிஸ்தலம் பகுதியில் கரும்பு பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

    • கபிஸ்தலம் சுற்று பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
    • மஞ்சள் நோய் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு கரும்புகள் வளர்ச்சி குன்றி உள்ளது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் தாலுகாவில் சேர்ந்த விவசாயிகள், தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறிப்பிட்டுள்ளதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் சுற்று பகுதி களான வடசருக்கை, வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர், கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த கரும்பு பயிர்களில் ஒரு விதமான மஞ்சள் நோய் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு கரும்புகள் வளர்ச்சி குன்றி ஒரு அடியிலேயே எட்டு கணுக்களும் உள்ளது.

    கரும்பின் தோகையை பிரிக்கும் போது உள்ளே எரும்பு, பூச்சி போன்றவை உள்ளது. வளர்ச்சி இல்லாததால் கரும்பு கொள்ளையை வயலிலேயே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×