என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோவையில் 2 வீடுகளில் நகை கொள்ளை கோவையில் 2 வீடுகளில் நகை கொள்ளை](https://media.maalaimalar.com/h-upload/2023/01/05/1817440-robbery.gif)
கோவையில் 2 வீடுகளில் நகை கொள்ளை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வைஷாலி தங்கி ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
- வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீளமேடு,
திருச்சியை சேர்ந்தவர் வைஷாலி (வயது 30). இவர் கோவை பீளமேட்டை அடுத்த பிருந்தவன் நகரில் தங்கி ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் அடிப்பட்டு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தான் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை கழற்றி அறையில் பீரோவில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் தன்னால் வேலை செய்ய முடியாததால் அவர் ஒரு வேலைக்காரரை பணிக்கு அமர்த்தினார். சம்பவத்தன்று வைஷாலி தனது நகைகளை அணிவதற்காக பீரோவை திறந்தார்.
அப்போது பீரோவில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீடு முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து வைஷாலி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி அமுதா (51). சம்பவத்தன்று இவர் சர்சுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்து.
பின்னர் இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.