search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு யூனியன் கூட்டம்
    X

     யூனியன் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    களக்காடு யூனியன் கூட்டம்

    • களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.
    • கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.

    களக்காடு:

    களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.

    ஆணையாளர்கள் அப்துல்லா, மணி, துணை தலைவர் விசுவாசம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கவுன்சிலர்கள் ஜார்ஜ் கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, சங்கீதா, விஜய லெட்சுமி, வனிதா, தளவாய் பாண்டியன், மேலாளர் சங்கரன் மற்றும் யூனியன் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    யூனியன் ஊழியர் முத்தரசன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் செங்களாகுறிச்சி, கோவிலம்மாள்புரம், புலியூர்குறிச்சி, வடுகச்சி மதில், படலையார்குளம், தேவநல்லூர், செங்களா குறிச்சி, சிங்கிகுளம் பஞ்சாயத்துகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கல்லடிசிதம்பரபுரத்தில் தடுப்பு சுவர் கட்டுவது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதனைதொடர்ந்து கவுன்சிலர் தமிழ்செல்வன் பேசுகையில், டெங்கு பணியாளர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அவர்களை கண்காணிப்பது யார்? ஜெ.ஜெ.நகர், படலையார்குளம் மக்களுக்கு பட்டா வழங்கவும், சத்திரம் கள்ளிகுளத்தில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை திறக்கவும், 16 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் களக்காடு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் புதிய அணை கட்டவும், சில் ஓடை, பெரிய ஓடைகளை அளவீடு செய்து, பாதை அமைக்கவும், சிதம்பராபுரம் வழியாக அரசு பஸ்கள் இயக்கவும், தலையணையில் உள்ள தென்வீதிக்காலை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.

    இதற்கு பதிலளித்த ஆணையாளர் மணி, அவர்கள் பணி செய்ததற்கு ஏற்றாற் போல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×