search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி  கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
    X

    தியாகதுருகம் புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
    • முதற்கட்டமாக சாலையில் மண் நிரவும் பணியும், மண் பரிசோதனையும் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.56 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலையில் உள்ள இருவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் சாலைபாதுகாப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உள்ள இருவழிச்சாலையில் சாலை விபத்து அதிகமாக ஏற்படுவது கண்டறியப்பட்டன.இந்த விபத்துகளை குறைக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை முதல் தலைவாசல் தேசிய சாலை போக்குவரத்து ஆணையம் மூலம் சுமார் ரூ.2.21 லட்சம் செலவில் சாலையின் மத்தியில் 18 மீட்டருக்கு ஒன்று வீதம் 3 கி.மீ. தூரத்திற்கு 170 போலாட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும், முற்றிலுமாக அவ்விடங்களில் விபத்துகள் ஏற்படா வண்ணம் தடுத்திட, கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை இருவழிச்சாலை பகுதிகளை 4வழிச்சாலையாக மாற்றித் தருமாறு மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.56 கோடி மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை முதற்கட்டமாக இருவழிச்சாலையினை 4 வழிச்சாலையாக மாற்றிடவும், இப்பணியினை டிசம்பர் 2022-க்குள் முடித்திடவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.இந்த சாலை அமைக்கும் பணியில் முதற்கட்டமாக சாலையில் மண் நிரவும்

    Next Story
    ×