search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்னை தாக்கியதால் நில புரோக்கரை கத்தியால் குத்தி கொன்றேன்
    X

    கோப்பு படம் 

    "என்னை தாக்கியதால் நில புரோக்கரை கத்தியால் குத்தி கொன்றேன்"

    • கைதான ரவுடி வாக்குமூலம்
    • மோட்டார் சைக்கிளில் முந்தி செல்வதில் தகராறு

    நாகர்கோவில்:

    கருங்கல் கப்பியறை புதுக்காட்டு வெட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் பாபு (வயது 57), நில புரோக்கர்.

    இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். தற்பொழுது சேவியர் பாபு நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வந்தார். நிலம் சம்பந்தமான பணிகளுக்காக சேவியர் பாபு அடிக்கடி நாகர்கோ விலிலுள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்.

    நேற்று முன்தினம் மதியம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது நண்பர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவருடன் மோட் டார் சைக்கிளில் வந்தி ருந்தார். பின்னர் செல்வ ராஜ், சேவியர் பாபு இரு வரும் கலெக்டர் அலுவ லகத்தில் இருந்து நெடுஞ்சா லைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும் இவர்க ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திர மடைந்த வாலிபர் சேவியர் பாபுவை கத்தியால் குத்தி னார். அதை தடுக்க வந்த செல்வராஜுக்கும் கத்தி குத்து விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சேவியர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.செல்வராஜை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகள் ஆய்வு

    கொலை நடந்த பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் பேக் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது சேவியர் பாபுவை கொலை செய்தது ராணி தோட்டம் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (33) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்ய நடவ டிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த சுபின் தலைமறை வானார்.

    இந்த நிலையில் சுபின் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சுபினை கைது செய்த னர்.கைது செய்யப்பட்ட சுபின் நாகர்கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார்.அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப் பட்டது.

    போலீசாரிடம் சுபின் அளித்துள்ள வாக்கு மூலத் தில் கூறியிருப்பதாவது:-.

    நான் உணவுப் பொருட் கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நேற்று முன்தினம் மதியம் உணவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் சேவியர் பாபு, செல்வராஜ் ஆகியோர் வந்தனர்.

    மோட்டார் சைக்கிளை முந்தி செல்வது தொடர்பாக எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. திடீரென அவர்கள் என்னை தாக்கி னார்கள். இதனால் ஆத்திர மடைந்த நான் அவர்களை கத்தியால் குத்தினேன். பின்னர் எனது மோட்டார் சைக்கிளையும் உணவு பொருள் டெலிவரி செய்யும் பேக்கையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தொடர்ந்து போலீசார் சுபினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சுபின் மீது ஏற்கனவே கோட்டார் வடசேரி நேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள் ளது.

    ரவுடிகள் பட்டியலி லும் சுபின் பெயர் இடம் பெற்று உள்ளது குறிப்பி டத்தக்கதாகும்.

    கொலை செய்யப்பட்ட சேவியர் பாபு மகள்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள்.சேவியர் பாபு கொலை செய்யப்பட்ட தகவல் வெளி நாட்டில் உள்ள அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சொந்த ஊருக்கு வர தயாரானார்கள். இந்த நிலையில் இன்று சேவியர் பாபுவின் மகள் ஊருக்கு வருகிறார். அவரிடம் சேவியர் பாபுவின் உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×