என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![குமரி மாவட்டத்தில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயம் குமரி மாவட்டத்தில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/23/1825423-missing-woman.webp)
கோப்பு படம்
குமரி மாவட்டத்தில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தனியார் நிறுவன தட்டச்சர் நந்தினி தனது தாயாரிடம் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்
- பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்த சகாய லூர்து பாப்பு மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நாட்களாக வரவில்லை.1
நாகர்கோவில்:
நாகர்கோவில் வட்ட விளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தினி (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தட்டச்சராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நந்தினி தனது தாயாரை தொடர்பு கொண்டு வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொல்லங்கோடு அருகே சந்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தி (18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த நிஷாந்தி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது தாயார் மகள் நிஷாந்தியை தேடினார்.அப்போது வீட்டில் இருந்து சான்றிதழ்களுடன் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது தாயார் ராணி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம்மவுண்ட் பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.இவரது மனைவி சகாய லூர்து பாப்பு (31). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.சகாய லூர்து பாப்பு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற அவர் நீண்ட நாட்களாக வரவில்லை.இதையடுத்து சிவகுமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.