search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி என்.சி.சி. முகாமில் காலை உணவு சாப்பிட்ட 43 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
    X

    மயக்கம் அடைந்த மாணவர்களுக்கு ஆறுதல் கூறும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

    கன்னியாகுமரி என்.சி.சி. முகாமில் காலை உணவு சாப்பிட்ட 43 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடை பெற்றது.

    முகாமில் இந்த பள்ளி களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்டவர்களில் சுமார் 43 பேர் வாந்தி, மயக்கம் எடுத்தனர். இதனால் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 13 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளிடம் ஆறுதல் கூறினார். அப்போது அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ்உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×