search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 47 சீசன் கடைகள் ரூ.33½ லட்சத்துக்கு ஏலம்
    X

    கன்னியாகுமரியில் சீசன் கடைகள் ஏலம் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தலைமையில் நடந்த போது எடுத்த படம்

    கன்னியாகுமரியில் 47 சீசன் கடைகள் ரூ.33½ லட்சத்துக்கு ஏலம்

    • 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது
    • .கார் பார்க்கிங் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது.

    இந்த125 சீசன் கடை கள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தலைமையில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜய லட்சுமி, நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    சீசன் கடை ஏலம் எடுப்ப தற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில் மொத்தம் 47 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. இந்த 47 சீசன் கடைகளும் ரூ.33 லட்சத்து 55 ஆயிரத்து 10-க்கு ஏலம் போனது. மீதி உள்ள 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    முன்னதாக கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கான கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 பேர் பங்கேற்றனர். இறுதியாக சூரப்பள்ளத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரூ.20 லட்சத்து 22 ஆயிரத்து 222க்கு ஏலம் பிடித்தார். மேலும் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.1லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சீசன்கடைஏலத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×