என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே குடும்ப தகராறில் மனைவி - மகளை அரிவாளால் வெட்டிய வாலிபர்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
- இரணியல் போலீசார் தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேனகா (வயது 39).
இவரது கணவர் ஜோஸ்லின் பாபு,கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு 12 வயது மகளுடன் வசித்து வந்த மேனகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு 2 குழந்தைகளுடன் மேனகா குருந்தன் கோட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று குருந்தன்கோடு வந்த ஜெய பால், ஆலயத்திற்கு சென்று வந்த மேனகா மற்றும் குழந்தைகளை குருந்தன் கோடு கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்துள்ளார்.
மேலும் மகனை தன்னு டன் அனுப்ப கூறி தகராறு செய்து உள்ளார். ஆனால் மகனை கொடுக்க மேனகா மறுத்தார். இதனால் ஆத்தி ரம் அடைந்த ஜெயபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேனகாவை வெட்டினார்.
இதில் மேனகாவுக்கு கழுத்து, நாடி, முதுகு, விரல் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது 12 வயது மகள் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஜெயபால் தப்பி ஓடி விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மேனகா மற்றும் அவரது மகளைஅங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்து வர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மேனகாவின் உறவுப் பெண் சிஜி (27) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.