search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் உள்ள  3 பஸ் நிலையங்களும் ரூ.8 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது
    X

    பஸ் நிலைய மேம்பாட்டு பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த காட்சி.

    நாகர்கோவிலில் உள்ள 3 பஸ் நிலையங்களும் ரூ.8 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது

    • மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள 3 பஸ் நிலையங்களும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது.

    விழாவிற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பஸ் நிலையங்கள் புணரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் தலை நகராக நாகர்கோவில் விளங்கி வருகிறது. இந்த மாநகராட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ரூ.8 கோடி மதிப்பில் இங்குள்ள 3 பஸ் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகியவை தலா ரூ. 2 கோடி மதிப்பிலும், கிறிஸ்டோபர் பஸ் நிலையம் ரூ. 4 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளது.

    இந்தப் பணிகள் முடியும் போது பஸ் நிலையங்கள் பொதுமக்கள் பயன்படுத்தவும் பார்க்கவும் மிக நன்றாக அமையும்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சர்வர் பிரச்சினை ஏற்படுவதாக கூறுகின்றனர். கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமல் விட்டதால் தான் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

    தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 1½ ஆண்டுகளில் பல்வேறு சர்வர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. விரைவில் அனைத்து நிலைகளும் சரியாகும்.

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அரசு எடுக்கும் முடிவை காலதாமதம் செய்யும் தவறான முன்னுதாரணம் வருத்தம் அளிக்கிறது. மக்களை பாதிக்கக் கூடிய வகையில் கவர்னர் கிடப்பில் போட்டு இருப்பதின் உள்நோக்கம் குறித்து பா.ஜனதா தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது. அவர்கள் இந்த இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினியர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. கலை இலக்கிய பகுத்த றிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் மதியழகன், செயற்குழு உறுப்பினர் சதா சிவம், மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×