என் மலர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும்
- பிரதமர், முதல்வருக்கு நுகர்வோர் சங்கம் கோரிக்கை
- படித்தவர்கள் மிகுதியாக உள்ள இந்த மாவட்டத்தில் உடனடியாக உள்நாட்டு விமான நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளுக்கு உதவ வேண்டும்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட நுகர் வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவரும், ெரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பி னருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம், பிரதமர், முதல்-அமைச்சர் ஆகி யோருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
ஆன்மீக சுற்றுலாத்தல மான கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கி ன்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வர ெரயில் வசதி இருந்தாலும் விமான நிலையம் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது.
விமான நிலையம் இல்லா ததால், குமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தூத்துக்குடி, திருவனந்தபுரம், மதுரை விமான நிலையங்களின் மூலம் பல்வேறு பகுதிகளு க்குச் சென்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் பயன் உள்ளதாக அமையும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதிய விமான நிலையம் அமைக்க கன்னியா குமரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புராதன வட்டக் கோட்டை முதல் ஜெயின் கோவிலை அடுத்துள்ள இடத்திலிருந்து அஞ்சு கிராமம், பழவூர் வழியாக கடற்கரையை அடுத்து,4 வழிச்சாலை அருகே இடம் உள்ளது. இந்த இடத்தை ஆய்வு செய்தவர்கள், விமான நிலையம் அமைக்க பாது காப்பான இடமாக உள்ள தாக தெரிவித்து உள்ளனர். இந்த பகுதியில் குறைந்த அளவில் சிறிய சிறிய வீடுகள் மட்டுமே உள்ளது. ஏனைய இடங்கள் போல் விமான நிலையம் அமைக்க மண் நிரப்ப எந்த தேவையும் இல்லை. இயற்கையை அழிக்காமலும், பறவைகள் வாழ்வதற்கும் எந்தவித இடையூறுகள் இல்லாமலும் இங்கு அமைக்க முடியும்.
இங்கு விமான நிலையம் அமைப்பதன் மூலம் தொழிற் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் எந்த வளர்ச்சியும் இல்லாத, பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாத குமரி மாவட்டம் மேலும் சிறப்படையும். படித்தவர்கள் மிகுதியாக உள்ள இந்த மாவட்டத்தில் உடனடியாக உள்நாட்டு விமான நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணி களுக்கு உதவுமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.