என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தை அமாவாசையையொட்டி புனித நீராட வந்த முதியவர் கடலில் முழ்கி பலி
- கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை
- விசாரணையில் பலியான முதியவர் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
கன்னியாகுமரி:
தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடலில் இன்று ஏராளமானோர் புனித நீராட குவிந்திருந்தனர்.
அந்த பகுதியில் காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கரை ஒதுங்கினார். இது குறித்து கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு இறந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பலியான முதியவர் தோவாளை பகுதியைச் சேர்ந்த லெட்சு மணன் (வயது 61) என்பதும், வெள்ளமடம் பகுதி யில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் இன்று அதிகாலை தை அமாவாசையையொட்டி புனித நீராடுவதற்காக கன்னியாகுமரிக்கு சென்றார்.
பின்னர் அவர் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கடலில் முழ்கி பலியாகி உள்ளது விசாரணையில் தெரியவந்தது.