search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர் வருகை பதிவு முறையில் மாற்றம்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர் வருகை பதிவு முறையில் மாற்றம்

    • காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் என்.எம்.எம்.எஸ். செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டு முதல் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவு 21-5-2021 முதல் இருமுறை என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக இயக்குனரின் கடிதத்தில் 1-1-2023 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தனிநபர் சொத்து உரு வாக்கம் பணிகளை தவிர்த்து அனைத்து பணித்தளத்தி லும் (20-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட பணி கூட) என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் மட்டுமே வருகை பதிவு மேற்கொள்ள கட்டாய மாக்கப்பட்டு உள்ளது.

    மேலும் விலக்கு ஏதும் அளிக்கப்பட மாட் டாது எனவும், இதன் அடிப்ப டையிலேயே வருகை பதிவுகள் பதியப்பட்டு நிதி பரிமாற்ற ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணியாளர்களும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகை யினை தவறாமல் என்.எம்.எம்.எஸ். செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.

    மேலும் இத்திட்டத்தின் குறைகள் தீர்ப்பதற்காக சத்தியசீலன் என்பவர் குமரி மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடைய செல்போன் எண்-8925811310, மின்னஞ்சல் முகவரி - Ombudsmankki@gmail.com ஆகும். எனவே பொதுமக்கள் மற்றும் திட்டத்தில் பணி புரிபவர்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறை தீர்ப்பாளரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக் கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×