search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள்
    X

    சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    3 மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள்

    • துறைமுகம் வெறிச்சோடியது
    • புயல், மழை எச்சரிக்கை எதிரொலி

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது.

    இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அடிக்கடி புயல் மழை ஏற்பட்டது.அதுமட்டுமின்றி அவ்வப்போது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்தது.

    மேலும் குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுவந்தனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதள மாகக்கொண்டு மீன் பிடித் தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த3மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரை யோரமாக நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது.

    இதேபோல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம் கீழம ணக்குடி, மணக்குடி, பள்ளம் ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரை கிராமங்களிலும் பெரும்பா லான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×