search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.10 லட்சம் காணிக்கை வசூல்
    X

    உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டுள்ள காட்சி 

    கன்னியாகுமரி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.10 லட்சம் காணிக்கை வசூல்

    • உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர்.
    • காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெரு மாள் கோவில் ஆய்வா ளர் ஹேமதர் ரெட்டி, விஜிலென்ஸ் அதிகாரிகள் அசோக் குமார், சூரிய நாராயணா மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

    இந்த உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வசூல் ஆகி இருந்தது.

    Next Story
    ×