என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழித்துறை பகுதியில் கல்லூரி மாணவிகள் - பெண்களிடம் அத்து மீறும் கும்பல்
- களியக்காவிளை போலீசாரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசார் மீதும் குற்றச்சாட்டு
- முகவரி கேட்பது போல் அருகில் சென்று ஆபாசமாக பேசுவது, அத்து மீறுவது என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு
கன்னியாகுமரி:
குழித்துறை நகராட்சி 8-வது வார்டு பகுதிக்குட்பட்ட சினிமா தியேட்டர் அருகே செல்கின்ற குறுகிய சாலை பகுதியை எளிதாக குழித்துறை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு செல்வ தற்கு மக்கள் பயன்ப டுத்தி வருகின்றனர். இவ்வழியாக தினசரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் செல்கின்ற பகுதியாகும்.
இந்த பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் சில மர்மநபர்கள் டிப்டாப் உடையணிந்து கஞ்சா போதையில் அப்பகுதி வழியாக நடந்து வரும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்று ஆபாசமாக பேசுவது, அத்து மீறுவது என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
மேலும் கஞ்சா வியாபாரிகள் குழித்துறை பகுதியில் சுற்றி திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுபான கடையில் இருந்து மதுபானம் வாங்கி வரும் மர்ம நபர்கள் சாலையில் இருந்து மதுபானம் அருந்துவதோடு அப்பகுதி வழியாக நடந்து வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வழியாக நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் அத்து மீறியதாக போதை யில் இருந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் நள்ளிரவில் இப்பகுதியில் முகாமிடும் மது போதை கும்பல் அருகில் இருக்கும் மின் விளக்குகளை உடைக் கும் செயலில் ஈடுபடுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது.
இது குறித்து பல முறை களியக்காவிளை போலீசாரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே பொது மக்கள் , கல்லூரி மாணவி களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் தலையிட்டு குழித்துறை பகுதியில் சமூக விரோத செயல் நடக்காதவண்ணம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து இப்பகுதியை கண்காணிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்